ராகம்: கமல மனோஹரி
தாளம்: ரூபகம்
அர்த்தம்:
அழகிய தாமரை மலரின் மனதினை கவரும் அழகுடைய அகிலாண்டேஸ்வரி, வெளியில் உள்ள 10 முக்கோணங்கள் (பஹிர் தாசாரம்) என்ற ஆவர்ணத்தில் இருக்கிறாள். ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம் மற்றும் அனுக்ரஹம் என்ற ஐந்து தொழில்கள் செய்கிறாள்.
த்ரிபுராஸ்ரீ இந்த ஆவர்ணத்தின் தலைவி. அவள் வணங்குகிறாள். குலோதீர்ண யோகினிகளும் ஸேவித்துக்கொள்கின்றனர். சர்வார்த்தசாதகம் என்னும் இந்த ஆவர்ணத்தின் மையத்தில் ஆட்சி புரியும் அன்னை, அனைத்து கார்யங்களையும் தடையின்றி நடத்தி வைக்கிறாள். மிகவும் மங்களமானவள்.
கோடி தாமரைகளுக்கு இணையான அழகுடைய லக்ஷ்மி, லலிதா பரமேஸ்வரியான அகிலாண்டேஸ்வரியை வணங்குகிறாள். எல்லா உயிர்களும் அவளை பூஜித்தால், அவற்றின் சங்கடங்கள், பயம் ஆகியவற்றை அறுக்கிறாள். இந்த்ர நீலத்தால் ஆன மாலையினை தன் அழகிய கழுத்தில் அணிந்துள்ளாள். சூர்யனின் புதல்வனான சனைச்சரனின் அருள் கிடைக்க காரணமாய் உள்ளாள்.
பாடல் கேட்க:
Check this out on Chirbit
தாளம்: ரூபகம்
பல்லவி
அகிலாண்டேஸ்வரி கமல மனோஹரி
பஹிர் தசார விஹாரினே பஞ்ச க்ருத்ய பராயனே
அனுபல்லவி
த்ரிபுராஸ்ரீ வந்திதே குலோதீர்ண யோகினி சமூஹ சேவிதே
மத்யம கால சாஹித்யம்
ஸர்வார்த்தஸாதக சக்ரமயே ஸகலகார்ய சித்தி ப்ரதாயிகே சிவே
சரணம்
கமலா கோடி சேவித லலிதா பரமேஸ்வரி
ஸகல ஜீவ பூஜித சங்கட பய மோசனி
இந்த்ர நீல ரத்ன ஹார சுந்தர கண்ட வதனே - ரவி
புத்திர சனைச்சர க்ரஹ ப்ரீத்யர்த்த காரனே

No comments:
Post a Comment