Monday, 27 July 2015

கணபதி த்யானம்

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி


பல்லவி
பிரசன்ன கணபதே நமோஸ்துதே
பிரணவ ஸ்வரூபா பார்வதி சுதா

அனுபல்லவி
கரத்ருத பாச அங்குச தரனே
சுர பூஜித பய சங்கட ஹரனே

சரணம்
ஸ்ரீ வித்யோபாசன பிரதம ஆராதகா
சிவ அனுக்ரஹநுத வாரண முகா
அகிலாண்டேஸ்வரி சாந்த்யத காரண
கஜாரண்ய க்ஷேத்ர மத்ய நிவாஸா

மத்யம கால சாஹித்யம்
பண்ட சைன்ய ப்ரதிஷ்டித விக்ன யந்த்ர நிர்பின்ன விக்னேஸ்வரா
பண்டாசுர மத கண்டன வைபவ சக்தி சேன முக்ய காரணா

அர்த்தம்:
பிரணவ ஸ்வரூபனும், பார்வதி புத்ரனுமான பிரசன்ன கணபதிக்கு என் முதற்கண் வணக்கம். 

நீ உன் கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் வைத்திருப்பாய். நன்மக்கள் உன்னை வணங்கினால் அவர்களின் பயம், சங்கடம் அனைத்தையும் போக்கி விடுவாய்.

ஸ்ரீ வித்யா உபாசகர்களில் முதன்மையானவன் நீ. பார்வதி தேவி உன்னை உருவாக்கியவுடன், "நான் நீராட செல்கிறேன். யாரையும் உள்ளே விடாதே" என்று கூறினார். அப்போது அந்த இடத்திற்கு வந்த பரமசிவனையே நீ உள்ளே விடவில்லை. அதனால் அவர் கையால் தலை அறு பட்டு பின் பார்வதி தேவி தனக்கு நீ வேண்டும் என்று சிவனிடம் கேட்டதால், அவர் அருளால் வாரண முகனாக மீண்டும் வந்தாய்.
நீ உனது அன்னையான அகிலாண்டேஸ்வரியின் எதிரில் இருப்பதால் தான், எப்போதும் சாந்தஸ்வரூபிணியாக இருக்கிறாள். கஜாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் திருவானைக்கா என்ற இடத்தின் மையத்தில் இருக்கிறாய்.

பண்டாசுரனை எதிர்த்து, ஸ்ரீ லலிதாம்பிகை போரிட்ட போது, பண்டாசுரனின் சைன்யம், குறுக்கு வழியில் அம்பிகையின் படையை தோற்கடிக்க, விக்ன யந்த்ரத்தினை வைத்தனர். அதனை செயலிழக்க செய்தவன் நீ. பண்டாசுரனை வீழ்த்தியதில் சக்தியின் படையில் முக்யமான காரண கர்த்தா நீ.

கஜானனம் ஸ்லோகம் - நாட்டை ராகம் கேட்க:
Check this out on Chirbit

பிரசன்ன கணபதே - நாட்டை ராகம் - ஆதி தாளம் கேட்க:
Check this out on Chirbit

1 comment:

  1. Started with samprathaya panthathy. Excellent natay delivered meticulous my.

    ReplyDelete