Wednesday, 29 July 2015

முதல் ஆவரணம்

ராகம்: துர்கா
தாளம்: ஆதி
பல்லவி
அகிலாண்டேஸ்வரி துரித நிவாரிணி
த்ரைலோக்ய மோகன சக்ர நிவாசினி

அனுபல்லவி

அப்புஸ்தல வாஸ ஜம்புகேஸ்வர
மனோஹரி மாதவ சோதரி ஸ்ரீ கரி

சரணம்

சதுரஸ்ர பூபுர சக்ரேஸ்வரி த்ரிபுரே
சதுஸ் ஷஷ்டி கோடி யோகினி பரிவாரே
சம்க்ஷோபினி அணிமாதி சித்தி சமூஹே
தசமுத்ர ஆராத்ய ப்ரதம ப்ரகாரே

மத்யம கால சாஹித்யம்

ப்ருஹஸ்பதி க்ரஹ அனுக்ரஹனுதே
ப்ரகட யோகினி சமூஹ சேவிதே
புஷ்பராக ரத்ன மணிமய தரே
சரணாகத ஜன சம்ரக்ஷிதே

அர்த்தம்:
ஸ்ரீ சக்ரத்தின் முதல் ஆவர்ணமான த்ரைலோக்ய மோகன சக்ரத்தில் வசிக்கும் அகிலாண்டேஸ்வரி, அடியார்களின் துன்பங்களுக்கு ,விரைந்து வந்து ஆறுதல் அளிப்பவள்.

பஞ்ச பூத ஸ்தலங்களுள் நீர் (அப்பு) ஸ்தலமான ஜம்புகேஸ்வரத்தில் வசிக்கும் ஜம்புகேஸ்வரரின் மனதிற்கு உகந்தவள். மாதவனின் சஹோதரி மற்றும் மங்களம் தருபவள்.

சதுரமான வடிவு கொண்ட முதல் ஆவர்ணமான பூபுரத்தின் தலைவி த்ரிபுரா. அவளோடு சேர்ந்த 64 கோடி யோகினிகள் இந்த ஸ்ரீ புரத்தினுள் உள்ளனர். சம்க்ஷோபினி முதலான 10 சக்திகள், அணிமா முதலான 8 சக்திகள் மற்றும் 10 முத்ரா சக்திகள் அன்னையை இந்த முதல் ஆவர்ணத்தில் ஆராதிக்கிறார்கள்.

இந்த ஆவர்ணத்தில் அம்பிகையை ஆராதிப்பதால், குரு (ப்ருஹஸ்பதி) அருள் கிடைக்கும். இந்த ஆவரணத்தின் யோகினிகள், ப்ரகட யோகினி ஆவார்கள். புஷ்பராக ரத்ன மாலையினை அம்பாள் அணிந்துள்ளாள். தன்னை சரணடைந்தவர்களை காத்தருள்கிறாள்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment