Monday, 27 July 2015

நவாவரண கீர்த்தன தொகுப்பு

நவாவரணம் என்பது, தேவி உபாசனையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இதில், அம்பிகையை 9 ஆவரணம் (சுற்று)  கொண்ட ஸ்ரீ சக்ரத்தில் வைத்து பூஜை செய்வார். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் ஒவ்வொரு சக்தி, யோகினி இருப்பார். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் ஒரு பெயர் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை அளிக்கும். 

இந்த நவாவரணத்தில், இவற்றைத்தவிர, ஒவ்வொரு நவக்ரஹ தேவதை, அந்தந்த தேவதைக்குரிய ரத்னங்களை அன்னை அணிந்திருப்பதாக பாடியுள்ளேன். வித்வான் ஸ்ரீ M.K.வெங்கட்ராமன் அவர்களின் "ஊத்துக்காடு வேங்கட கவி காமாக்ஷி நவாவர்ண கீர்த்தனைகள்" என்ற புத்தகத்தில், ஆந்திர மாநிலத்தில், இவ்வாறு 9 ஆவரணத்திற்கும் ஒரு நவக்ரஹ தேவதை, ஒரு ரத்னம் வைத்து பூஜிப்பார்கள் என்று கூறி இருந்தார். அவற்றை வைத்து இவ்வாறு எழுதியுள்ளேன்.

தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.

ஆதி சங்கரர், அகிலாண்டேஸ்வரியின் செவிகளில் ஸ்ரீ சக்ர தாடங்கங்களை ப்ரதிஷ்டை செய்வதற்கு முன் உக்ரமாக இருந்தாள். அவர் ப்ரதிஷ்டை செய்த பின், சாந்த ஸ்வரூபிணியாக மாறினாள். என்றும் சாந்தமாக இருப்பதற்காக, மகன் விநாயகரின் திரு உருவத்தையும் சிலாரூபமாக அம்பிகையின் எதிரில் ப்ரதிஷ்டை செய்தார். அவரே பிரசன்ன கணபதி.

அந்த பிரசன்ன கணபதியினை வணங்கி, விக்னங்கள் ஏற்படாமல் முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று வேண்டி, கணபதி த்யான கீர்த்தனம் அமைய பெற்றுள்ளது. நாட்டை ராகத்தில் உள்ளது இந்த கீர்த்தனை.

அடுத்து, அகிலாண்டேஸ்வரி த்யான கீர்த்தனை, பூர்வி கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது. இதில், அவளை பற்றி பாட அவள் அருள வேண்டும் என்பது தான் பிரார்த்தனை.

இதனை தொடர்ந்து 9 ஆவரணங்கள். ஆவரணத்தின் பெயர், ராகம், நவக்ரஹ தேவதை, ரத்னம் என்னும் படியாக,

1. த்ரைலோக்யமோகன சக்ரம் - துர்கா, ப்ருஹஸ்பதி, புஷ்பராகம் 
2. ஸர்வாசபரிபூரக சக்ரம் - பைரவி, அங்காரகன், பவழம் 
3. ஸர்வஸம்க்ஷோபன சக்ரம் - ரஞ்சனி, சுக்ரன், வைரம் 
4. ஸர்வசௌபாக்யதாயக சக்ரம் - ஸ்ரீ, சந்திரன், முத்து
5. ஸர்வார்த்தசாதக சக்ரம் - கமலா மனோஹரி, நீலம், சனைஸ்சரண்    
6. ஸர்வரக்ஷாகர சக்ரம் - மோகனம், மாணிக்கம், சூரியன் 
7. ஸர்வரோகஹர சக்ரம் - சரஸ்வதி, மரகதம், புதன் 
8. ஸர்வசித்திப்ரதயாக சக்ரம் - கீரவாணி, கேது, வைடூர்யம் 
9. ஸர்வானந்தமைய சக்ரம் - ரேவதி, ராகு, கோமேதகம் 

இதற்கு அடுத்து, மங்களாஸாசன  கீர்த்தனை. அம்பிகையை வணங்கி, என்றும் அவளுக்கு வெற்றி என்று பாடுவதாக, லலிதா ராகத்தில்  அமைந்துள்ளது.

இதில் எல்லா ராகங்களும் (கணபதி த்யான கீர்த்தனத்தை விடுத்து) அம்பாள் பெயராலேயே அமைந்துள்ளது.

அவ்யாஜ கருணாமூர்த்தி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அனைவருக்கும் நல்லருள் புரிய என்றும் வேண்டும்,

சரண்யா

2 comments:

  1. MAY I REQUEST YOU TO KINDLY PROVIDE OR MAIL ME THE SANSKRIT VERSION OF
    kEERTANAS?[natcons18@gmail.com]

    ReplyDelete
    Replies
    1. I dont have sanskrit version. I am not well versed in sanskrit. Thank you.

      Delete